Saturday, November 2, 2024

பாராட்டு

 உயிருக்குத் தேவையாம் நல்லுணவு

பயிருக்குத் தேவையாம் தொழுவுரம்

உடலுக்குத் தேவையாம் ஆரோக்கியம்

அதற்குத் தேவையாம் உடற்பயிற்சி


வாழ்க்கைக்குத் தேவையாம்

வளம்

வாழ்வுக்குத் தேவையாம் ரசனை

இல்லுக்குத் தேவையாம் இல்லாள்

அவளுக்குத் தேவையாம் அன்பு.


நாட்டுக்குத் தேவையாம் நற்கோன்

வீட்டுக்குத் தேவையாம் நன்மக்கள்

ஊருக்குத் தேவையாம் 

உற்சாகம்

அதற்குத் தேவையாம்

விளையாட்டு


உழைப்புக்குத் தேவையாம் ஓய்வு

ஓய்வைக்கழிக்கத் தேவையாம் கைவினைகள்

வினைப்பொருளுக்குத் தேவையாம் வியாபாரம்

அதற்குத் தேவையாம் முதல்.


முதலுக்குத் தேவையாம் தனம்

தனவந்தருக்குத் தேவையாம் சுற்றம்

சுற்றத்துக்குத் தேவையாய்ம் நட்பு

 நட்பு

அதற்குத் தேவையாம் நல்லிணக்கம்



சமுதாயத்துக்குத் தேவையாம் மரபு

சமூகத்துக்குத் தேவையாம் சமத்துவம்

நல்வாழ்வுக்குத் தேவையாம் நாகரிகம்

அதற்குத் தேவையாம் நல்லொழுக்கம்


வளர்ச்சிக்குத் தேவையாம் விஞ்ஞானம்

அமைதிக்குத் தேவையாம் மெய்ஞானம்

எழிலுக்குத் தேவையாம் இயற்கை

அதற்குத் தேவையாம் மழை


இளமைக்குத் தேவையாம் போட்டிகள்

இனிமைக்குத் தேவையாம் பாடல்கள்

பாக்களுக்குத் தேவையாம் பாவலர்

அவரகட்குத் தேவையாம் பாராட்டு.