தனிமை
கலந்து மகிழும் உலகம் உன் களிப்பில் - நீ
கலங்கும்போது மட்டும் உன்னைத் தவிர்த்துவிடும்
களிப்பில் கலக்கும் உலகும் ஒதுங்கக்
காரணம் ஆயிரம் அதற்கும் உண்டாம்.
பெருமையுடன் உன்னுடன் பாடும் மலைகளும் - நீ
பெருமூச்சு விட்டால் காற்றில் கரைத்துவிடும்
பேருவகையை எதிரொலிக்கும் பரந்த மனப்பாங்கு
படும்துயர் கண்டிடின் மௌனமாகும்.
துள்ளிடும் இன்பத்தில் கூடும் மக்கள் - நீ
துயரத்தில் ஆழ்ந்தால் விலகிப் போவர்
துய்க்கும் இன்பத்தில் பங்கு விழைவோர்
துன்பத்தின் பங்கோ மறுத்தே விடுவர்.
ஆயிரம் நட்புண்டு ஆனந்த வாழ்வில்
ஆரும் அருகிலில்லை ஆறாத சோகத்தில் - நீ
அருந்தும் தேனை விரும்பாதோர் இல்லை
அனுபவிக்கும் கசப்பை விரும்புவோரும் இல்லை
புசிக்கும் போது நிறையும் உன்னில்லம் - நீ
பசித்திருக்கும்போது வெறுமையே காணும்
பெற்ற வெற்றி உன்னை வாழவைக்கலாம்
பெறமாட்டாய் உதவி நீ போகும் காலத்தில்
வளமையான வாழ்வின் உறைவிடத்தில்
வருவோர்க்கெல்லாம் ஏராள இடமிருக்கும்
வலியின் குறுகிய பாதையில் நிற்க மட்டும்
வரிசை ஏனோ நீண்டே யிருக்கும்.
Solitude - by Ella Wheeler
Laugh, and the world laughs with you;
Weep, and you weep alone;
For the sad old earth must borrow its mirth,
But has trouble enough of its own.
Sing, and the hills will answer;
Sigh, it is lost on the air;
The echoes bound to a joyful sound,
But shrink from voicing care.
Rejoice, and men will seek you;
Grieve, and they turn and go;
They want full measure of all your pleasure,
But they do not need your woe.
Be glad, and your friends are many;
Be sad, and you lose them all,—
There are none to decline your nectared wine,
But alone you must drink life’s gall.
Feast, and your halls are crowded;
Fast, and the world goes by.
Succeed and give, and it helps you live,
But no man can help you die.
There is room in the halls of pleasure
For a large and lordly train,
But one by one we must all file on
Through the narrow aisles of pain.