Saturday, February 1, 2025

மலரே நிலவே

 

கண்ணுறக்கம் கொள்ளும் வேளையிலே

கண்டேன் வானில் விண்மீன்கள் - அவை

விண்ணுலகப் புற்தரையில்

விதைத்தெழுந்த வெண்மலர்களோ!


அக்கனவில் நான் மிதக்கையில்

அம்புலி வானைக் கடக்கிறாள்

அழகுமங்கை அவள் நித்தம்

அங்குள்ள மலர்களைப் பறிக்கிறாள்.


காலையில் கண்விழித் தெழும்போதில்

காணோம் விண்ணின் மலர்களே

கன்னியவள் கொய்த மலரனைத்தும்

கண்ணெதிர்ச் சோலையில்

களிநடனமாடுதே!


.          .    Daisies


by Frank Dempster Sherman


At evening when I go to bed

I see the stars shine overhead;

They are the little daisies white

That dot the meadow of the Night.


And often while I'm dreaming so,

Across the sky the Moon will go;

It is a lady, sweet and fair,

Who comes to gather daisies there.


For, when at morning I arise,

There's not a star left in the skies;

She's picked them all and dropped them down

Into the meadows of the town.                

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home