Thursday, October 24, 2024

ஓட்டம்

 

ஓட்டம் தேவையா?



ஆடும் மழலைகளின் ஓயாத இரைச்சல்

வீழும் மழைத்துளிகளின் வெடிப்புச் சிதறல்

பறக்கும் பூச்சிகளின் ஒழுங்கற்ற பயணம்

இறங்கும் ஆதவனை விழுங்கும் தொடுவானம்


மிஞ்சிய வேகத்தில் காணாத காட்சிகள்

எஞ்சிய நாட்களில் நீடிக்காத இசையலைகள்


அவசர வாழ்க்கையின் அயராத ஓட்டம்

அமைதியாய் அளவளாவ அணுவுமில்லை நாட்டம்

உழன்றோடி உடல்களைத்திரவு நிற்குமெனதாட்டம்

உறக்கத்தை விரட்டும் பணிச்சுமையின் பின்னூட்டம்


அளவற்ற வேலைகளின் அதிகளவு சுமைகள்

அழுத்தம் தாளாமல் அழுகின்ற இமைகள்


ஆசையோடு வந்த மழலையை நாளையென ஒதுக்கும்

அதன் துக்கம் புரியாமல் நம்வேகம் மறைக்கும்

பழகிய நட்பெல்லாம் பகைபோல அகலும்

பாராமல் இருந்ததனால் என்றெப்போது புரியும்?


எது வேண்டுமென்றே தெரியாமல் எதையோ விழைகிறோம்

அது வரும்போது சுகிக்காமல் அவசரமாய் விரைகிறோம்


எங்கோவுள்ள இலக்கடைய பதறியே பயணிக்கும்போது

இஙகேயுள்ள இனிமையை துய்க்கவும் தவறுகிறோம்

இந்த நாளைக்கடக்க துடியாய்த் துடிப்பதென்பது

வந்த பரிசையும் வாங்காமல் வீசுவதன்றோ?


வாழ்க்கை ஒரு பந்தயமல்ல. நிதானமாய் கடந்திடுங்கள்.

உங்கள் ஆட்டம் முடியும் முன்னர் இசையை மெல்ல ரசித்திடுங்கள்.


செப்.19, 2023

Translation of:

 Have you ever watched kids
On a merry-go-round?

Or listened to the rain
Slapping the ground?

Ever followed a butterfly’s erratic flight?
Or gazed at the sun fading into the night?

You better slow down.
Don’t dance so fast.

Time is short.
The music won’t last.

Do you run through each day
On the fly?

When you ask: How are you?
Do you hear the reply?

When the day is done,
Do you lie in your bed

With the next hundred chores
Running through your head?

You better slow down.
Don’t dance so fast.

Time is short.
The music won’t last.

Ever told your child,
We’ll do it tomorrow?

And in your haste,
Not see his sorrow?

Ever lost touch,
Let a friendship die

Cause you never had time
To call and say, “Hi?”

You better slow down.
Don’t dance so fast.

Time is short.
The music won’t last.

When you run so fast to get somewhere,
You miss half the fun of getting there.

When you worry and hurry through your day,
It’s like an unopened gift thrown away.

Life is not a race,
So take it slower.

Hear the music
Before your song is over.

Slow Dance
by David L. Weatherford



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home