Wednesday, August 20, 2025

பயணம்

 


வாழ்க்கை என்பதும் ஒரு பயணம் 
இரயில் பிரயாணத்தைப் போலவே

வசதியாய் சன்னல் அருகில்

இரண்டிரண்டு பேராய் அமரவே


பயணம் முழுவதும் உன்னருகில்

எப்போதும் நான் அமரலாம்

பார்க்க முடியாத வேறிடத்தில்

என்னிருக்கையும் அமையலாம்


விதிதன் போக்கில் ஒருவேளை இருவரையும் அருகே அமர்த்திடின்

விழைந்தே சுமுகமாய்ப் பயணிப்போம்

இப்பயணம் மிகக் குறுகியதே!

Sunday, August 10, 2025

புதிய பறவை

 

புதிதாய் வந்த இளங்குயிலே உன்

வரவில் மிகவும் மகிழ்கிறேன்.

சிட்டாய் விரையும் நீ பறவைதானா அல்லது

காற்றில் கரையும் குரலமுதா?


பரந்த வெளியில் நான் கிடக்கையிலே

இரண்டாய் உன் குரல் ஒலிக்கிறதே!

பெரிதும் சிறிதுமான மலைகளுக்கிடையில்

அருகிலும் தொலைவிலுமாய்க் கேட்கிறதே!


ஆதவனொளியிலும் ஆயிரம் மலரிலும்

ஆர்ப்பரித்து உலாவும் உன் ஆரவாரம்

இதயத்துள் கிளறும் எண்ணங்களை

சேர்த்தே காட்சியாய்ப் பொழிகிறதே!


வசந்தத்தின் வரவே வருகவருகவே

இசைக்குயில் நீயென நானறிந்தும்

கண்ணுக்குத் தென்படா கனிமதுரமே

விண்ணின் புதிராய் விளங்குகிறாயே!


சிறுபிராயத்துச் சீரிய நட்பே

உரு(க்)கும் உன்குரல் பரிச்சயமே.

தொடர முயல்கிறேன் ஆனவழிகளில்

புதரிலும் மரத்திலும் வானகத்திலுமே.


அலைகிறேன் காட்டில் உன்னைத் தேடியே

மலையிடைப் பெரும் புல்வெளியிலுமே.

ஏக்கமும் நம்பிக்கையும் உளதேயாயினும்

காக்க வைக்கிறாய் காட்சி தராமலே!


இன்றும் தரையில் உணர்கிறேனே

உன்னமுதக் குரலைக் கேட்கிறேனே

விந்தையாக உன்குரல் கேட்டபோதிலே

அந்த பொன்நாட்களுமே வந்திடுதே!


ஓ மாயக்குயிலே! நீ மட்டுமிருந்தால்

உலகே வண்ணமாய் மாறுகிறதே!

என்னை மயக்கும் இக்கனவுலகம்

உண்மையில் உனக்கு உரித்தானதே!


"To the Cuckoo"

by William Wordsworth 


O blithe New-comer! I have heard,

I hear thee and rejoice.

O Cuckoo! shall I call thee Bird,

Or but a wandering Voice?


While I am lying on the grass

Thy twofold shout I hear;

From hill to hill it seems to pass,

At once far off, and near.


Though babbling only to the Vale

Of sunshine and of flowers,

Thou bringest unto me a tale

Of visionary hours.


Thrice welcome, darling of the Spring!

Even yet thou art to me

No bird, but an invisible thing,

A voice, a mystery;


The same whom in my school-boy days

I listened to; that Cry

Which made me look a thousand ways

In bush, and tree, and sky.


To seek thee did I often rove

Through woods and on the green;

And thou wert still a hope, a love;

Still longed for, never seen.


And I can listen to thee yet;

Can lie upon the plain

And listen, till I do beget

That golden time again.


O blessèd Bird! the earth we pace

Again appears to be

An unsubstantial, faery place;

That is fit home for Thee!

புதிய பறவை - 2

 

காலைநேரத்து அமைதியான குளிர் காற்று

கடப்பா கல்லில் கட்டிய திண்ணை

கண்ணுக்குப் போதிய சூரிய வெளிச்சம்

கருத்தைக் கவர காலைத் தினசரி


இதற்கு மேல் வேறென்ன வேண்டும் என்று

எண்ணிய படியே செய்திகளில் மூழ்கி

இருக்கும் புத்தியை மழுங்காமல் காக்க

எண்புதிர் அவிழ்ப்பது எனது வழக்கம்


சிந்தனையை ஒருமுகமாய்ப் புதிரில் குவித்து

சரியான எண்களை கட்டங்களில் நிரப்பி

சரிபார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில்

சிறிய குருவிகள் இரண்டின் புதிய குரல்


இனிமையாய் ஒலித்த கீச்சுக் குரல்

இதுவரை கேளாத இன்னிசை கீதம்

இதற்குச் சொந்தம் எந்த இனமோ?

இருக்கையை விட்டு எழுந்து தேடினேன்


மரத்தை வளர்த்தது உகந்ததே எனினும்

மரத்தின் கிளைகள் வளர்த்தவனை மறந்து

அமரும் பறவைகளுக்குப் புகலிடம் கொடுத்து

அவைகளை என்னிடமிருந்து மறைக்கக் கண்டேன்


சமீபத்தில் ரசித்த கவிதையைப் போல

சப்தம் கேட்டும் உருவத்தைக் காட்டாது

அலைக்கழிக்கும் சிட்டை ஆர்வத்துடன் தேடியும்

அகப்படாததால் ஆயாசத்துடன் திரும்பினேன்


சிதறிய கவனத்தில் சிதைந்தது ஒழுங்கு

சரியாக முடியாமல் சிக்கியது கணக்கு

கட்டங்களை தப்பும் தவறுமாய் நிரப்பி

குறுக்கே கோடிட்டுக் கலைத்தேன் புதிரை.


புதிர் கலைந்ததில் ஏமாற்றமே எனினும்

புள்ளினத்தின் மீது வரவில்லை கோபம்.

புதிதுபுதிதாய் பொழுதுபோக்கை மாற்றும்

பித்து மனிதரை அவை அறியுமா பாவம்!


முடிக்காத புதிரை வீசி எறிந்தேன்

முகத்தில் மெலிதான புன்னகை கண்டேன்

இனம்புரியா இம்மகிழ்சிக்குக் காரணம்

இன்றுவந்த அப்பறவைகள் நாளையும் வரலாம்!