Wednesday, October 23, 2024

அபத்தம்

 புராணங்களிலும் இதிகாசங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் ஒரு நல்ல கருத்தைக் கூற அபத்தமான கதைகள் நிறைந்திருக்கின்றன.


உதாரணத்திற்கு தொழில் தர்மம் பேணும் விபச்சாரி அன்றைய ஆணை கணவனாகவே வரிக்கின்றாள். கைநிறைய பணமும் நகைகளும் தந்து விட்டுச் சென்ற கட்டழகன் மீண்டும் இரவில் வந்தபின் அவன் தொழுநோயாளி என அறிந்தும் அவனை வேண்டிய அளவுக்கு உபசரித்து திருப்திப்படுத்துகிறாள். காலையில் அவன் எழாமல் இறந்திருப்பதைக் கண்டு உடன்கட்டை ஏறுகிறாள்.

அக்கணம் எரியும் சிதையிலிருந்து இறைவன் வெளிப்பட்டு தான் நாடகமாடியதை விளக்கி தனது பரம பக்தையான அவள் என்றும் தன்னுடன் இருக்கும்படியான வரத்தை அருள்கிறார். இவ்வாறு உருவானதுதான் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்கிராமத்தின் கதை.

செய்யும் தொழிலை தெய்வமாக எண்ணினாலே நற்கதி கிடைக்கும் என்பதை விளக்க வேறு நல்ல உதாரணங்கள் கிடைக்கவில்லையா?

இழிவாகத் தோன்றும் செயல்களும் செய்துதான் ஆகவேண்டும் என்பதற்கு விபச்சாரம் நல்ல உவமையா?

விபச்சாரிகள் பாவப்பட்ட வர்கள். அவர்களை வெறுத்து ஒதுக்கக்கூடாது என்பதுதான் இக்கதை புகட்டும் நீதியா?

பரத்தையரை நாடிச்செல்லும் ஆண்களை ஏன் யாரும் தண்டிப்பதில்லை?

இத்தகைய அபத்தக் களஞ்சியங்கள் இந்து மதத்தை இழிவுபடுத்தத்தானே உதவும்?

குறைந்தபட்சம் இனிமேலாவது இத்தகைய கதைகளை வழக்கிலிருந்து ஒழிக்கலாமே?

செய்வார்களா?

Dec 27, 2022

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home