தேவை
தேவை ஒரு பேப்பர், பென்சில், ரப்பர்
விட்டதிலிருந்து தொடர்வோம்
தவறாக வரைவதிலும் ஒரு இன்பம் - அதைக் கண்டு
மற்றவருக்கு முன்னால் நாமே சிரிப்போம்
தேவை ஒரு பழைய புத்தகம்
விட்ட இடத்திலிருந்தோ மீண்டுமோ படிப்போம்
நினைவுகளைக் கிளர்வதில் ஒரு மகிழ்ச்சி
நாமே மீண்டும் புதியதாய் பிறப்போம்
தேவை ஒரு புதிய புத்தகம்
காலங்கள் மாறினாலும் ரசனை மாறாது
புதிய நடையின் மாற்றத்தை வியப்போம்
இரு உலகங்களிலும் இருந்ததில் அகமகிழ்வோம்
தேவை ஒரு புதிய மொழி
தொடக்கத்திலிருந்து புதிதாய் கற்போம்
இளஞ்சிறர்களின் ஞாபகத் திறனை
முதுமையின் மறதியால் மறக்க முயல்வோம்
தேவை ஒரு சிறு தனி உலகம்
நமக்குப் பிடித்தவைகளைநமக்காகவே செய்வோம்
கவிதையோ பாடலோ ஓவியமோ சமையலோ
அமைந்தால் பகிர்வோம்
இல்லையேல் மறுபடியும்...
தேவை ஒரு சிறு வெளி உலகம்
நம்மை மறக்க ஆயிரம் விஷயங்கள்
அமைதியாய் அமர்ந்து அவைகளை ஆராய்ந்தால்
இத்தனை வயதும் போதாதென்றே நினைப்போம்
தேவை ஒரு ஆன்மத் தேடல்
பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல்
மானுடமும் மற்ற இன்னுயிர் யாவையும்
சிறிதேனும் பயனுற ஏதாவது செய்வோம்
தேவை ஒரு ஞானத் தேடல்
இயங்கியது எப்படி என்பதை விடுத்து
இயக்கியது யார் என உள்ளே தேடி
விடையைக் கண்டால் நாமும் ஞானி
தேவை ஒரு திடமான திட்டம்
உள்ளம் சிறகடித்தாலும் உடலும் ஒத்துழைக்க
நடையோ யோகமோ சற்றே பயிற்சியுடன்
நிதானத்துடன் பாதையை நிறைவாகக் கடப்போம்
Responses:
Hemu
👏👍
எட்டு பத்தென்று பொருட்களையே தேடுபவர்கள்
உட்பொருள் உள்ள இக்கவிதையை படிப்பது மிகவும் தேவை.
சிவகைலாசம்
தேவை - படைப்பாளிக்கு பாராட்டு.
My late b-in-law, an artist-turned- businessman, used to add a footnote "ஐஸ் தேவை", every time after writing about the award he received for his work. Appreciation of a good work is so valuable. It should come from one's heart.
Here is my hearty praise of your different needs. Needless to say I need them very much, especially the ātmānubhavam and jnānam.
சின்ன சின்ன தேவைகள்,
சிலவற்ற தேவைகள்,
சிலவற்றை எண்ணி--நான்
சிந்தனையிலாழ்ந்தேன்.
Dr P
அழகு....மிக அற்பதம்....ஏதோ ஒன்றை நான் அனுப்பிச் சொல்லப் போக...
உன்னிடமிருந்து பிறந்தது ஒரு அழகியல் கவிதை...
Aug 8, 2024
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home