Sita
Hey my bro Ravana,
The pair of brows
on the base of her forehead
A formidable bow
That can petrify any target
The beautiful eyes
moistened with tears
Do resemble a pair of
lubricated spears
The shine of white
From the teeth of this girl
Is akin to the lustre
of a precious pearl
The rosy tender lips
Appearing as if floral
Would make one take some dips
For they do look like coral
There aren’t just the right words
That can express her class.
Like the paddy is also a grass, but
To call it a grass is so gross!
These are only metaphors
To help you imagine her beauty
Beware, these are just no match
In her glare, others are just sooty.
Her beauty, my dear brother
To describe, I have tried in vain
Seeing in person for yourself
is only how you can gain.
Aug 4, 2024
வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல்
ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும்,
பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;
சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும்,
நேர் உரைத்து ஆகவற்றோ!
பதவுரை:
வில் ஒக்கும் நுதல் என்றாலும் - வில்லைப் போல் நெற்றி அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்;
விழி வேல் ஒக்கும் என்றாலும்-
கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்;
பல் முத்து
ஒக்கும் என்றாலும் - பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று சொன்னாலும்;
பவளத்தை இதழ் என்றாலும் - பவளமே இவள் இதழ்கள்என்று சொன்னாலும்;
சொல் ஒக்கும் - உவமிக்கப்படும் சொல் பொருத்தம் ஆகலாம்; (அல்லாது);
பொருள் ஒவ்வாதால் - (சீதையின் உறுப்பழகை உணர்த்தும் முழுமையான) பொருளால் பொருந்தாது;
சொல்லல் ஆம் உவமை உண்டோ - (எனவே) சொல்லத்தக்க உவமை வேறு ஏதேனும்
உளதாகுமோ? (இல்லை) ;
புல் ஒக்கும் நெல் - புல்லைப் போன்றிருக்கும்
நெல்; என்றாலும் - என்று கூறினாலும்;
நேர் உரைத்தாக அற்றோ? - பொருத்தமாக கூறியதாகக் கருத முடியுமா? (பொருந்தாது).
பொருளுரை
வருணனைக்கு அப்பாற்பட்ட பொலிவும் அழகும் சீதைபால்
பொருந்தியுள்ளன எனவும், அதனால் நீயே நேரிற் காண்பதே பொருத்தம்
எனவும் சூர்ப்பணகை உணர்த்துகின்றாள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home