மரண தண்டனை
வெய்யிலின் தாக்கத்தில் தடுமாறிய ஏழை
நிழல் அகப்படாமல் தள்ளாடி விழுந்தான் பேதை
அவனைப் பார்க்கவும் அவ்விடத்தில் யாருமில்லை
அக்கறையுடன் விசாரிக்க அவனுக்கும் நாதியில்லை
இரங்கி, இறங்கி வந்தான் தேவன் அவனிடம்
முதியவன்போல் தரித்து வந்தான் வேடம்
கைத்தாங்கலாய் அழைத்துச் சென்ற இடமோ ஒரு சோலை
பசியாற ஈந்தான் சுவைகனிந்த மா, பலா, வாழை
உயிர்காத்தீர் பெரியவரே குளிர்ந்தது என் அகம்
கைம்மாறு என் செய்வேன் பகர்ந்தால் மிக்க நலம்
கைகூப்பிய ஏழையை அணைப்பால் தேற்றி
கூர்கோடரியைத் திணித்தான் அவன் கைகளைப் பற்றி
அவனைப் பார்க்கவும் அவ்விடத்தில் யாருமில்லை
அக்கறையுடன் விசாரிக்க அவனுக்கும் நாதியில்லை
இரங்கி, இறங்கி வந்தான் தேவன் அவனிடம்
முதியவன்போல் தரித்து வந்தான் வேடம்
கைத்தாங்கலாய் அழைத்துச் சென்ற இடமோ ஒரு சோலை
பசியாற ஈந்தான் சுவைகனிந்த மா, பலா, வாழை
உயிர்காத்தீர் பெரியவரே குளிர்ந்தது என் அகம்
கைம்மாறு என் செய்வேன் பகர்ந்தால் மிக்க நலம்
கைகூப்பிய ஏழையை அணைப்பால் தேற்றி
கூர்கோடரியைத் திணித்தான் அவன் கைகளைப் பற்றி
வேறொன்றும் வேண்டாம் மகனே இன்றெனக்கு
இம்மரங்களை வெட்டிவிடு வளராமல் என்றைக்கும்!
இதென்ன விபரீதம்! ஏவினான் மேலே ஏழை தன் பார்வையை
அவன் கண்கள் கண்டதோ அடர்ந்த பசும் மரப்போர்வை!
அங்கொன்றும் இங்கொன்றும் பட்சிகளின் கூடுகள்
குதூகலமாய் கூடிவிளையாடும் சின்னஞ்சிறு குஞ்சுகள்
கானப் பறவைகள் பொழிந்தன காதில் இன்பத்தேன்
கனத்த தேன்கூடுகளிலிருந்து சொட்டியது கையில் இனிய தேன்!
இயற்கையின் அமைப்பில் தான் எத்தனை உயிர்ப்பு!
இதனை அழிப்பதா? எழுந்தது மனதில் எதிர்ப்பு.
இத்தனை உயிர்களை எடுக்கத் தான் எந்தன் உயிரைக் கொடுத்தீரோ?
பிற உயிர்நீக்கும் கொடுஞ்செயலைப் புரிவேன் என்றே நினைத்தீரோ?
வேண்டாம் இப்பாதகம் இது தவறு
இதல்லவே நான் நினைத்த கைம்மாறு
என்றே நேர்மையுடன் நயந்து பேசினான்
கோடரியை கிழவனிடமே திரும்பி வீசினான்
மெச்சிய பரம்பொருள் காட்சி தந்தான்
பரமனைக் கண்ட ஏழையோ மூர்ச்சையானான்
விழித்தெழுந்த இடமோ அரசின் செயலகம்
மந்திரிகளைக் கண்டு அடைந்தான் பரவசம்
சுற்றுச்சூழல் மந்திரி அருகில் வந்து வினவினார், என்ன சிந்தனை?
சற்றும் தாமதிக்காமல் விடையளித்தான்,
இயற்றிடுவீர் இன்றே ஓர் ஆணை,
மரம் வெட்டினால் மரணதண்டனை!
(ஒரு கன்னடக் கவிதையின் தாக்கம், மொழிபெயர்ப்பு)
June 6, 2023
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home