Friday, April 28, 2023

Fear and Fancy

 


I liked Khalil Gibran's poem "Fear" that was shared  recently.  This is an offshot from its impact.  Gibran's poem is also given below.

Now that I have taken the plunge
Deep into the sea foward I lunge
Taking in all that the sea has in store
Many of which I've never seen before.

I shiver as the chill strikes me cold
As I look for something to catch and hold
But the deep sea pulls me towards her heart
As the gentle me feel I am ripped apart

Into the swirl I go round and round
Losing my shape, smell and sound
My gentle ripples lost in her thunderous roars
My sweetness diluting the salinity she stores

Half way in I push up to see the sun
Only to find the sea and I have become one
Memories full of things that I  left ashore
Will I ever get there back, I am not sure.

As wishful thoughts take me in their grip
I feel the warmth of the sun heating me up
I rise afloat with an eerie sense of pleasure
That my dream will come through in good measure

As a mighty cloud I force a gust of wind
To take me past the shore and into the land
Hitting the hill top with much conviction
I fall into its lap as rain from convection

Oh my God, I am back on my pasture
Making my way as guided by nature
Feeding life all my way down the valley
And the plateaus and plains as I rally

Thank you Lord, for making me live again
And for the respect I stand to gain
Helping life forms to quench their thirst
And the sinners to rinse off their dirt.

Though the woods and land as I flow
I am proud to see settlements grow
 knowing this gift will last only a while, i rush
 For I already hear the sea waves lash.




1 Comments:

Blogger Raghu said...

My sister asked me what is the meaning. I thought of it, and came up with the following, for a start.

கலீல் ஜிப்ரான் - நதியின் அச்சம்


சில மாதங்களுக்கு முன்பும் இந்தக் கவிதை வாட்ஸப்பில் பகிரப்பட்டது. அப்போது என் நண்பர் ஒருவர் இந்த பதிவை குறிப்பிடாமல் ஜிப்ரான் கவிதையை தனியாக பகிர்ந்து கவிஞனின் சிந்தனை விசாலத்தை வியந்திருந்தார்

கவிஞனின் சிந்தனையை தொடரும் விதமாக என் கற்பனைச் சிறகை விரித்து பறக்க விட்டேன். இயற்கையின் கொடையாக பொங்கி எழுந்தன எண்ணங்கள். கவிஞனின் கவிதைக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்த என் கவிதை ரசிக்கும்படியாகவே அமைந்தது.

அதில் நான் கடலில் சேரும் முன் அச்சத்தில் உறைந்திட்ட நதி இனி வேறு வழியில்லை வருவதை ஏற்போம் என முடிவெடுத்து கடலில் கலக்கிறது. அளவற்ற சக்தியான கடலில் நுழையும்போது கடலின் சீற்றத்தாலும் அலைகளின் ஆர்ப்பரிப்பாலும் தாக்கப்பட்டு நிலைகுலைந்தாலும் சிறிது சிறிதாக தான் கடலில் கரைவதை உணர்ந்து விடா முயற்சியால் தன் தனித்துவம் இழக்காமல் மேலெழுந்து ஆதவனின் தூய வெப்பத்தை கிரகித்துக்கொண்டு ஆவியாகிறது

பின்னர் மேகத்தில் கலந்து கரையைத் தாண்டி பயணித்து மலைமுகட்டில் முட்டி மழையாகப் பெய்து மண்ணில் விழுந்து மீண்டும் நதியாக உருவெடுக்கிறது என்று எனக்கு தோன்றியதை விவரித்திருந்தேன்.

இப்போது கவிதைக்கு வருவோம்.

முதல் செய்தி, மரணத்தைக் கண்டு கலங்கிடும் விஜயா...தான். இன்பமான வாழ்க்கை ஓட்டத்திற்குப் பின் முடிவு நெருங்கும்போது அச்சம் ஏற்படத்தான் செய்யும். இது யாரும் தப்ப முடியாத இயற்கையின் விதி என்பதை உணர்ந்து வருவதை ஏற்றுக் கொண்டால் இயற்கைப் பெருங்கடலில் கலந்து இயற்கையின் ஒரு துளியாகவே ஆகிவிடுவோம் என்று உணர்ந்தால் மரண பயம் நீங்கி மனம் தெளிவடையும்.

இரண்டாவது செய்தி இதன் தொடர்ச்சி. மானிடர் ஆன்மா மரணம் எய்தாது. மறுபடி பிறந்திருக்கும். புனரபி ஜனனம் புனரபி மரணம். மரணத்திற்கு பின்னர் ஏதோ ஒரு வாழ்வு காத்திருக்கிறது. எனவே, அச்சம் தவிர்.

மூன்றாவது செய்தி, எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நமது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடக்கும்போது தான் ஏமாற்றம், விரக்தி, சோகம் உண்டாகிறது.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு மட்டுமல்ல, வேண்டுதல் வேண்டாமை இல்லாத மனம் படைத்தார்க்கும் யாண்டும் இடும்பை இல.

நான்காவது செய்தி, அச்சம்தான் மரணம். அச்சத்தை வென்றவருக்கு என்ன நேர்ந்தாலும் ஒப்புக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். சலனமற்ற சிந்தனை பெற்று சிக்கலான விஷயங்களிலும் தெளிவாக முடிவெடுக்கும் திறன் கைகூடும்.

ஐந்தாம் செய்தி, வாழ்வின் முடிவில் நதி மறைவதில்ல், கடலாக மாறுகிறது. தயக்கம் அச்சம் போன்ற பிற உணர்வுகள் இல்லாமல் ஒரு செயலில் ஈடுபடும்போது நாம் அச்செயலின் குறிக்கோளின் தன்மைக்கு மேன்மையடைகிறோம்.

ஆறாம் செய்தி, இலக்கு உன்னதமாக இருக்குமானால் அதை அடைய எந்த ஒரு அடையாளமோ,ஆடம்பரமோ, அணிகலனோ, அலங்காரமோ தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் மனம் முதிர்ச்சியும் பக்குவமும் அடைய அடைய எளிமை தானாக வந்தடையும். நிறைகுடம் தளும்பாது

ஆக, கீதையின் சாரத்தை பல நாட்டினரும் பல வழிகளில் உணர்ந்திருக்கின்றனர்.

வேலை இருக்கிறது. இத்துடன் முடித்துக் கொள்கிறேன். அமைதியாக உட்கார்ந்து அசைபோட்டால் மேலும் சிந்தனைகள் தோன்றலாம். அனைவரும் முயற்சிக்கலாம்.

April 28, 2023 at 2:34 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home