Friday, December 27, 2019

Annular Eclipse of 2019


It was a long time in the making. My appointment with the sun. For the annular eclipse that was to take place on December 26, 2019. With the line of maximum annularity passing right through South India where I live, though it meant I had to travel a little for the best vantage location.

My general interest in astronomy and things up in the sky had alerted me about this event as far back as the summer of 2016, a clear three and a half years before the actual occurrence. I was browsing through the maps of paths of eclipses. Many of the eclipses were a mirror image of the previous or the second previous ones, and I was wondering at this discovery I had just made. That led me to look for all the eclipses over the next ten years or so, and bingo! - there was one crossing right through my native place in South India. On looking up further, I came to understand about the annular solar eclipse of December 2019.

I have my in-laws living in Trichy, where I could comfortably stay and leave early in the morning to view the eclipse, if I had a chance. In Trichy, the duration of annularity was very less – just about a few seconds. So I scanned the map for places near Trichy which offered a duration close to the maximum one could ever get in India – that is, more than three minutes of annularity, and which was well connected on the highway so that I could reach without much of a hassle too. Of the three places the map showed, i.e. Manapparai, Thirumayam and Arantangi, Thirumayam fit the bill well and I decided on that. Having fixed the appointment, since I had lots and lots of time ahead, I had comfortably put this in the back of my mind.





One doesn’t know how life changes its course. Out of sight, out of mind, they say. Personal commitments and pressures of life have certainly changed my routine a lot. My retirement and the subsequent duty I had volunteered entailed my travel to nearby Bangalore for three days a week. A minor set back in my health added to more adjustments to be made here and there. The consequence of all this was that I had totally forgotten my appointment with the sun.

But the sun had not. A very powerful God as the sun is, things so arranged themselves that my son and daughter, with Christmas holidays in their hands and not knowing what else to do, decided to visit their grand parents (i.e. my inlaws) and asked if we (my wife and I) could join, as it is quite long since we travelled together, especially by train. And so it happened on the dot, at the right time and place, our trip to Trichy on the 25th of December 2019.

A quick glance at Wikipedia enabled me to latch on to the Thirumayam fort for viewing the eclipse.  Bharath (my son) and I left Srirangam around 7.30 in the morning on the 26th, and after a relaxed drive, reached the fort just on time as they opened entry. On the way, we could observe, through the translucent clouds, that the eclipse had already commenced. Dark patches of clouds on the horizon gave us a little worry in the beginning, but as we travelled further, we were relieved that the clouds slowly gave way only to a haze, through which the eclipse, even if somewhat obstructed, would still certainly be visible because of the brightness of the sun.



When we reached the fort, a few eclipse enthusiasts had already gathered there. After taking the tickets, we quickly made our way up the fort, to the peak – the altar where a cannon is kept – and sat on the south east corner of the altar, taking the solar glasses out to catch a glimpse at the sun.




Wow, what a sight it was! The moon slowly coming in sliding in front of the sun and obstructing the sun’s disc, making it, the sun, appear as a crescent moon! The elevated altar and the cool winter breeze adding to the eeriness of the situation. Both my son and I remembered scenes from the movie Apocalypse, which also centered around a total solar eclipse. All those assembled were eagerly getting ready to view the annularity and capture it on their instruments. As the moon’s disc completely came into the sun’s, the annularity started. I was surprised that the moon’s disc was apparently so small – it looked like it was just about a little more than three fourths of the sun’s disc. Therefore, the ring that formed was comparatively much thicker than what we had seen in the images of previous annular eclipses. The bright orange ring glowing through the solar filter was absolutely stunning. After watching for a minute and a little more, we shared our glasses with those who had not brought one. The village lads were especially thrilled and excited at the sun’s appearance, as they had never seen a crescent of the sun in their life!




The tech savvy photo enthusiasts started blurting instructions – set the aperture, increase the zoom, get into burst mode, so on and so forth. My humble point and shoot camera without any filter or attachment was clearly not equipped to handle the brightness of the sun. However, Bharath managed to capture a good image on his iPhone by placing the solar glasses in front of his camera’s eye. We were very happy with that. Not only that, being there at the right spot at the right moment, and helping others get a good glimpse of the eclipsed sun all added to our feeling of absolute satisfaction that day. All the travel and effort was not in vain.



The other important thing I noticed was that, as against the total solar eclipse where you get to see absolute darkness setting in when the sun is fully covered, the annular eclipse creates no such magic.  The outer world was just a degree dimly lit, that's all.  I thought the animals and birds would exhibit a little nocturnal behaviour, but it was not to be, as there was abundant shine glowing through the thick annular ring.  Had there been a small tree around, we could have seen several images of the ring cast by the eclipsed sun, but it too was not to be.

We sat there for some more time after the annularity passed, and then slowly made our way back to the ground, clicking a few shots here and there.

Come, enjoy the scenes as we witnessed there at Thirumayam.  A few more photos taken at this place can be viewed at my flickr album: Thirumayam 

Thursday, December 12, 2019

ஜிங்லி




ஆரம்பத்தில் எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. என் சம்மந்தி வீட்டில் சம்மந்தியும் சரி, சம்மந்தியம்மாவும் சரி, மாப்பிள்ளையும் சரி, மாப்பிள்ளையின் தம்பியும் சரி, வீட்டில் எந்த சாமான் தேடினாலும்அவரைத்தான் கேட்பார்கள். அவரும் சளைக்காமல் எல்லோருக்கும் எது வேண்டுமோ அதைக் கொண்டு வந்து தருவார், அல்லது வீட்டில் எங்கு இருக்கிறது என்று சரியாகச் சொல்லுவார். அனைவரும் அவரை "காகா" என்று தான் அழைத்தார்கள். அதாவது, என் சம்மந்தியின் சிற்றப்பா அவர். எங்கள் மொழியில் காகா என்பது வழக்கம். அதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது. நானும் என் மனைவியும் கூட அவரை காகா என்று அழைக்கத்தொடங்கிவிட்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

என் மாப்பிள்ளை அப்போது இங்கிலாந்திலும் அவரது தம்பி அமெரிக்காவிலும் இருந்தனர். அவர்கள் வந்துசெல்லும்போதெல்லாம் அவர்கள் வந்தவுடனே அவர்களது பாஸ்போர்ட் மற்றும் இதர முக்கிய பொருட்கள் எல்லாம் வாங்கி பத்திரப்படுத்திவிடுவார். இந்தக்காலத்து இளைஞர்களைப்பற்றி அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எங்காவது வைத்துவிட்டு கிளம்பும் நாளன்று இங்கேதான் வைத்தேன் இப்போது காணோம் என்று தையா தக்காவென குதிப்பார்கள். இதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல் மிகப் பொறுப்பாக முன்கூட்டியே சிந்தித்து செயல்படுவார்.


ஏதோ காரணத்தினால் திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை முறை. நேரத்திற்கு சாப்பாடு, அதுவும் மிதமான அளவில் மட்டுமே. மாலையில் சிறிய சிற்றுண்டி, இரவில் சிறிதளவு மோர்சாதம் மட்டும். இதில் மாற்றமே இருக்காது.

வயது எழுபதைத்தாண்டியிருந்தாலும் அவரது சுறுசறுப்பு இளைஞர்களையே வியப்பிலாழ்த்தும். ஒரு நாளைக்கு பலமுறை மாடி ஏறி இறங்கி நிற்காமல் இயங்கிக்கொண்டிருப்பார். உலக விவரங்களில் மிகவும் ஆர்வமுள்ளவர். வீட்டில் ஜெனரல் நாலெட்ஜ் போட்டி வைத்தால் நிச்சயம் அவர்தான் ஜெயிப்பார். எந்த மாநிலத்தில் எந்த நாட்டில் யார்யார் ஆள்கிறார்கள், அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறது, ஜி எஸ் டி நல்லதா கெட்டதா, எல்லாவற்றையும் அக்குவேர் ஆணிவேராக அலசுவார். லேட்டஸ்ட் படம், சீரியல் எதுவும் விடமாட்டார். ஆன்லைனில் பொருட்கள் வாங்கித்தள்ளுவதில் அவருக்கு அலாதி இன்பம். கைநிறைய பென்ஷன் வந்ததால் செலவைப் பற்றி எப்போதும் அவர் கவலைப்பட்டதில்லை. அதே சமயம் பொருட்களுக்கான சரியான விலையைப்பற்றி நான்கைந்து இடங்களில் தேடி ஒப்பிட்டு யார் குறைந்த விலையில் விற்கிறார்களோ அதையே வாங்கும் சாமர்த்தியம் அவருக்கு இருந்தது. இளைஞர்களுக்குப் போட்டியாக, இதோ பார்… என்னாலும் முடியும் என்று மொபைல் போன், அமெசான் ஸ்டிக், -பேட் என்று எல்லாவற்றிலும் தன் வித்தையை காண்பிப்பார்.
விருந்தினர்களின் போனில் சார்ஜ் குறைவாக இருந்தால் அவர்களுக்கு ஏற்ற சார்ஜரையோ கேபிளையோ ஒரு நொடியில் எடுத்துத் தருவார்.

தண்ணீருக்கு மோட்டார் போடுவதும் அவர்தான். ஓவர்ஃப்ளோ ஆகி டாங்க் வழியும்போது ஓடிச்சென்று மோட்டாரை நிறுத்துவதும் அவர்தான். காகா, ஸ்கூட்டர் சாவி பாத்தியா என்று என் சம்மந்தி கேட்டால், நீ தானேடா கடைசியா மார்க்கெட் போய்வந்தே, கிச்சன் டேபிளில் பார் என்று அவருக்கு ஞாபகமூட்டுவார் அது சரியாகவும் இருக்கும். சம்மந்தி வீட்டில் வைஃபை பாஸ்வேர்டு அடிக்கடி மாற்றும் வழக்கம் இருந்தது. அதை சரியாக ஞாபகம் வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் உதவுவார். யாருக்காவது சிறிது உடல்நிலை சரியில்லை என்றால்கூட அவசரத் தேவைக்கான அனைத்து மருந்துகளையும் வீட்டில் வைத்திருப்பார், அல்லது குறிப்பிட்ட உபாதைக்கான சரியான மருந்தையும் சொல்வார்.

ஏதாவது ஊர்களுக்குச் செல்லவேண்டும் என்றால் அதற்கு சரியான வழி எது, வண்டி எது என்பது முதற்கொண்டு வழிகாட்டுவார். சிறுவயதில் இந்தியாவின் அனைத்து முக்கிய இடங்களுக்கும் சென்ற அனுபவம் கொண்டு, எந்தெந்த இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும், அங்கு விட்டுவிடாமல் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன, வாங்கவேண்டிய பொருட்கள் என்னென்ன என்று அனைத்தையும் அறிந்த நடமாடும் என்சைக்ளோபீடியாவாகத் திகழ்ந்தார்.

எங்களுக்கு பேத்தி பிறந்தபின் அவளிடம் அவருக்கு அலாதி ஈடுபாடு. அவள் பிறக்கும்போதே ஆஸ்பத்திரிக்கு வந்து கவலையுடன் காத்திருந்தார். குழந்தை பிறந்தவுடன் நர்ஸ் வெளியில் கொண்டுவந்து காண்பிக்கும்போது ஆர்வத்துடன் முட்டிக்கொண்டு முன்னால் வந்து பார்த்து மகிழ்ந்தார். அவள் வளர வளர அவளுக்கு வேண்டிய பொருட்களின் பாதுகாப்பையும் பார்த்துக்கொண்டார். அவள் பேச ஆரம்பித்தவுடன் அவரும் மழலையில் இறங்கி, அவளுக்கு ஜிங்லி என்று பெயர் சூட்டினார். அதனால் அவள் அவரை ஜிங்லி தாத்தா என்று அழைக்க, கடைசியில் அவரது பெயர் ஜிங்லியாக மாறியது! அவளுக்குப் பாடுவதில் ஈடுபாடு இருப்பதைக் கண்ட அவர், குழந்தைதானே, பொழுதுபோக்குதானே என்று பார்க்காமல் நூற்றுக்கணக்கில் செலவு செய்து ஒரு மைக் செட்டை ஆன்லைனில் வரவழைத்து பரிசளித்து அவளது வியப்பில் அகமகிழ்ந்தார்.

நாளடைவில் நுரையீரல் நோயால் மிகவும் அவதிப்பட்டார். சிறிதுகூட மாசு தாங்கமுடியாமல் எப்போதுமே ஆக்ஸிஜன் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானதால் அவரால் முன்மாதிரி வெளியில் செல்ல முடியவில்லை. ஆனாலும் வீட்டு நிகழ்ச்சிகள் வெளியிடத்தில் நடந்தாலும் சிரமப்பட்டு கொஞ்சநேரமாவது இருந்து கலந்துகொண்டுவிட்டுத்தான் செல்வார்.

காலத்தின் கட்டாயத்தால் என் மாப்பிள்ளை பெங்களூருக்கு மாற்றலாகி பேத்தி அங்கு செல்ல நேரிட்டாலும் அவளுடனும் சரி. அமெரிக்காவில் இருக்கும் பேரனோடும் சரி, அவ்வப்போது வீடியோ கால் மூலம் தொடர்பில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். என் சம்மந்தியும அவர் மனைவியும் சேர்ந்து வெளியில் செல்ல இயலாதபடி அவரைப் பார்த்துக்கொள்ளும்பொருட்டு யாராவது ஒருவர் இவருடனேயே இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் அடிக்கடி உடல்நிலை மோசமாகி அவசரம் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. அவர்கள் படும் கஷ்டத்தைப் பொறுக்காத அவர், மிகவும் வற்புறுத்தி தன்னை ஒரு நல்ல முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிட வலியுறுத்தி சேரவும் சேர்ந்தார்.

அவரை கடைசியாக நான் அந்தக் காப்பகத்தில் சென்று பார்த்தபோது என்னிடம் உற்சாகமாகவே பேசிக்கொண்டிருந்தார். அங்க ஒரே அறையில் மூன்று பேர் இருந்தனர். அனைவரையும் பார்ப்பதற்கும் பார்த்துக்கொள்வதற்கும் பலதரப்பட்ட ஆட்கள் அடிக்கடி போய்வந்துகொண்டிருப்பதால் தன்னுடைய ஸ்மார்ட் போனை அங்கு வைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. என்னிடம், வீட்டில் மாடி அலமாரியில் நான் முதலில் வைத்துக்கொண்டிருந்த நோக்கியா இருக்கிறது. அது வேலை செய்யும் நல்ல நிலையில்தான் இருக்கிறது. குறும்பாக, என்ன, டச் (touch) விட்டுப்போய், திரும்பவும் பட்டன் அமுக்கணும்.. அதைக் கொண்டுவந்து வைத்துக்கொள்ளலாம் என்ற இருக்கிறேன் என்று சொல்லிச் சிரித்தார். அவரது pun எண்ணி வியந்தேன்.

அவர் விருப்பத்தின்பேரிலேயே சேர்ந்தாலும், அதன்பிறகு அவரது உடல்நிலை மிகக்குறுகிய காலத்தில் மிகவும் மோசமடைந்து இரண்டு மாதத்திற்குள்ளாகவே இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டு திரும்பியபின் அவர் நினைவாகவே உறங்கியிருக்கிறேன். அந்த நோக்கியா போனில் "arrived safely” என்று அவரிடமிருந்து மெஸேஜ் வந்ததுபோல் ஒரு கனவு!



Monday, December 2, 2019

நீதிபதி


நீதிபதி

ஓய்வு பெற்ற நீதிபதி தர்மராசு தனது விசாலமான வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து ஆனந்தமாக தன் பேரன் சுகுமாருடன் விளையாடிக்கொண்டிருந்தார்.

அவருக்கு ஒரு மகள், ஒரு மகன். திருமணமான மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறாள். மகன் பொறியியல் பட்டதாரி. உள்ளூரிலேயே நல்ல வேலை. திருமணமாகி இரண்டரை வயதில் பேரன். பள்ளிக்கு அனுப்ப இன்னும் காலம் இருப்பதால் வீட்டில் அவனுக்கு தாத்தாதான் நண்பன், மந்திரி, நல்லாசிரியன் எல்லாம்.

அன்று முற்பகல் அவனுடன் சிறிது நேரம் விளையாடியபின்பு களைப்படைந்த இருவரும் வரவேற்பறையில் இருந்த சோபாவில் உட்கார்ந்து மின்விசிறியைத் தூண்டிவிட்டு இளைப்பாறிக்கொண்டிருந்தனர். தர்மராசுவிடம் சுகுமார், தாத்தா … போரடிக்குது தாத்தா.. ஏதாவது கதை சொல்லு தாத்தா… என்று கெஞ்சினான். கதைதானே… என்னிடம் ஏராளமான கதை இருக்கு… வா ஒண்ணு சொல்றேன் இன்னிக்கு…. என்று கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊரிலே விறகு வெட்டி ஒருவன் இருந்தான்...என்று ஆரம்பிக்கும்போதே, விறகு என்றால் என்ன தாத்தா? என்று முதல் கணை தொடுத்தான் பேரன். மைக்ரோவேவ் காலத்தில் அமர்ந்துகொண்டு விறகைப் பற்றி பேசினால் குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம்? அதனால் முதலில் பழையகால வாழ்க்கை முறை பற்றி சற்று விளக்கிவிட்டு பின்னர் கதையைத் தொடர்ந்தார் தர்மராசு...

அன்னிக்கு காட்டுக்குப்போய் காய்ந்த மரம் ஏதாவது பார்த்து அதை வெட்டி விறகு கொண்டுவந்தால்தான் அவன் வீட்டில் அடுப்பு எரியும்… அப்படி காட்டுக்குப்போய் விறகையும் வெட்டிக்கொண்டு வரும் வழியில் தாகமாக இருக்கவே, அங்கிருந்த குளத்தில் கைகால்கள் மற்றும் விறகு வெட்டும் கோடரியையும் சுத்தம் செய்துகொண்டு பின்னர் தண்ணீர் குடிக்கலாம் என்று குளத்தில் இறங்கி கோடரியைக் கழுவிக்கொண்டிருக்கும்போது அது வழுக்கி தண்ணீரினுள் விழுந்து விட்டது.. எவ்வளவு துழாவித் தேடியும் கிடைக்கவில்லை. அவன் அடுத்தநாள் பிழைப்புக்கு என்ன செய்வது என்று வருந்தி கவலைப்பட்டுக்கொண்டே குளத்திலிருந்து புறப்படும் வேளையில் அந்தக் குளத்திலிருந்து எழுந்த அழகிய தேவதை அவனை அழைந்து, ஏன் அழுகிறாய் என்று விசாரித்தாள். நீ யாரம்மா? என்று விறகுவெட்டி அவளைக் கேட்க, அவள், நான்தான் இந்தக் குளத்தின் தேவதை. இங்கு தண்ணீர் பருகும் மக்கள், விலங்குகள், பறவைகள் அத்தனையையும் நான்தான் இரட்சிக்கின்றேன். நீ ஏன் அழுகிறாய், உன் கவலை என்ன சொல், நான் தீர்த்துவைக்கிறேன் என்றாள்.

விறகுவெட்டி நடந்ததை விவரிக்க, அவள், ஒரு நிமிடம் இரு… என்று சொல்லி குளத்தினுள் மூழ்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்துவந்து இதுதானா உன்னுடைய கோடரி..பார்… என்று காண்பித்தாள். விறகுவெட்டி அதைப்பார்த்துவிட்டு இல்லை தாயே இது என்னுடையதில்லை .. என்றான். அவள் மீண்டும் மூழ்கி இம்முறை ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்துக் காண்பித்தாள். இதுவும் என்னுடையதில்லை… என்று விறகுவெட்டி கூற, மூன்றாம் முறை மூழ்கி அவனது இரும்புக் கோடரியை எடுத்து வந்தாள். அதைப் பார்த்த விறகுவெட்டி, அதுதான் தாயே.. இந்த பழைய கோடரிதான் என்னுடையது…. மிக்க நன்றி உனக்கு… என்று கூறி அதைக் கொடுக்கும்படி கேட்டான். ஆனால் தேவதையோ, விறகுவெட்டி, உன் நேர்மையை நான் மெச்சுகிறேன்… ஏழையாக இருந்தும் மற்ற பொருட்கள்மேல் ஆசைப்படாமல் உன்னுடையதை மட்டும் கேட்கும் உனக்கு இந்த தங்கக்கோடரி மற்றும் வெள்ளிக்கோடரியையும் என் பரிசாக அளிக்கிறேன்… எடுத்துக்கொண்டு இவற்றை தக்கவரிடம் விற்று உன் வறுமையைப் போக்கிக்கொள்.. என்று கூறி மூன்று கோடரிகளையும் அவனிடமே கொடுத்துவிட்டு நீரினுள் மூழ்கி மறைந்துவிட்டாள் அந்த தேவதை….. என்று கதையை நிறுத்தினார் தர்மராசு.

விரிந்த விழிகளுடன் வியப்பாக கதை கேட்டுக்கொண்டிருந்த பேரனைப் பார்த்தார். நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றவர் அல்லவா? தன் பேரன் எந்த அளவுக்கு இந்தக் கதையையும் அதன் நீதியையும் கிரகித்துக்கொண்டிருக்கிறான் என்று அறிய விரும்பினார். இதுலேர்ந்து என்ன தெரியறது கொழந்தே? என்றுஅவனைப்பார்த்துக் கேட்டார். புத்திசாலிக் குழந்தையல்லாவா அவன்? உண்மையைச் சொன்னா பரிசு கிடைக்கும்! என்று அவர் எதிர்பார்க்காத பதில் ஒன்றைக்கூறி அவரை ஆச்சரியத்தில் தள்ளினான்.

மிக்க மகிழ்ச்சியுடன், வெரி குட்… கதை இன்னும் முடியலே… இதோ கேளு… என்று மீண்டும் தொடர்ந்தார்.

மூணு கோடரியையும் கொண்டுபோய் வீட்டில அவனோட பொண்டாட்டிகிட்ட காட்டி நடந்ததெல்லாம் சொல்லி, அடியே.. இதை ரகசிமாய் வெச்சிக்கோ… யார் கிட்டயும் சொல்லாதே… நான் போய் அந்த வெள்ளிக்கோடரியை வித்து பணமாக்கிண்டு வரேன்.. மொதல்ல கடனையெல்லாம் அடைச்சிட்டு நம்ம வீட்ட சரி பண்ணிண்டு நிம்மதியா இருக்கலாம். நான் பாட்டுக்கு எப்பவும் போல வேலைக்குப் போறேன்.. அந்தத் தங்கக் கோடரியை பத்திரமா உள்ளே பூட்டி வை… எப்பவாவது தேவைப்படும்போது அதை எடுத்தாப்போதும்… என்று அவளுக்கு உத்தரவிட்டுட்டு எப்பவும்போல தான் வாழ்க்கையைத் தொடங்கினான் அவன்.

ஆனா இத்தனைநாள் எதுவுமே இல்லாம இருந்த அவன் திடீர்ன்னு எப்படி கடனையெல்லாம் அடைச்சான்.. வீட்டையெல்லாம் சரி பண்ணிண்டான்… அப்படீன்னு அவனோட பக்கத்து குடிசைல இருந்த இன்னொரு விறகுவெட்டியோட பொண்டாட்டிக்கு சந்தேகம் வந்துடுச்சு. அவ இவனோட பொண்டாட்டிகிட்ட துருவித் துருவி கேக்க ஆரம்பிச்சா. பொம்பளைங்ககிட்ட ரகசியம் நிக்குமா? அவ தங்கக் கோடரியைப்பத்தி மட்டும் சொல்லாம மத்ததெல்லாம் சொல்லிட்டா. அதைக்கேட்ட அந்த பக்கத்துவீட்டுக்காரி தன்னோட புருஷனையும் நீயும் அவன் போன அதே காட்டுக்குப் போய் அந்தக் குளத்திலே உன்னோட கோடரியைத் தூக்கிப்போட்டுட்டு அந்த தேவதை வரும்போது இதே மாதிரி உனக்கும் ஒரு வெள்ளிக்கோடரி கேட்டு வாங்கிட்டு வா.. அப்படீன்னு தினமும் நச்சரிக்க ஆரம்பிச்சா. அவளோட தொந்தரவு தாங்கமாட்டாம அவனும் ஒருநாள் இவனிடம் வழி கேட்டுண்டு அதே காட்டுக்குப் போனான்… என்று சொல்லி நிறுத்தினார்.

சுவாரஸ்யம் அதிகமான சுகுமார் எழுந்து அவர் அருகில் அணைத்தபடி உட்கார்ந்துகொண்டான். சொல்லு தாத்தா… அப்புறம் என்னாச்சு? என்று உற்சாகத்துடன் கேட்டான். சொல்றேன், சொல்றேன்… என்றபடி கதையைத் தொடர்ந்தார் தர்மராசு.

அவனும் அதே காட்டுக்குப் போனான். போனானா, அதே குளத்துக்கும் போய்விட்டான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவனுடைய கோடரியை நன்றாக குளத்தின் நடுவில் விழும்படி வீசி எறிந்தான். எறிந்துவிட்டு, ஐயையோ என்னுடைய கோடரி போச்சே… என்று உரத்த குரலில் அழத் தொடங்கினான். அவன் எதிர்ப்பார்த்தாற்போலவே சற்று நேரத்தில் நீரில் சலசலப்பு கேட்டது. அந்த தேவதை குளத்தினுள்ளிருந்து பிரசன்னமாகி, யாரப்பா நீ, ஏன் அழுகிறாய்? என்று கேட்டாள். விறகுவெட்டி பேராசையுடன், என்னுடைய கோடரி குளத்தினுள் வழுக்கி விழுந்துவிட்டது… நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? என்று அழுதான்.

அதைக்கேட்ட தேவதை, அழாதே… இரு, இதோ வருகிறேன்.. என்று சொல்லி குளத்தினுள் மூழ்கி வெளிவரும்போது இரண்டு கைகளிலும் தங்கக்கோடரி ஒன்றும் வெள்ளிக்கோடரி ஒன்றும் கொணர்ந்து இவைகளா உன்னுடைய கோடரி...பார்… என்றாள். விறகுவெட்டி பேராசையுடன், ஆமாம்! ஆமாம்! இவை இரண்டுமே என்னுடைய கோடரிகள்தான்…. கொடுங்கள்! கொடுங்கள்! என்று ஆவலுடன் கை நீட்டினான். கோபமடைந்த தேவதை, முட்டாளே! பேராசைக்காரனே! உன்னுடைய பழைய இரும்புக் கோடரியை வேண்டுமென்றே குளத்தின் நடுவில் நீ வீசியதை நான் அறியமாட்டேன் என்ற நினைத்தாயா? உழைத்து முன்னேற விரும்பாமல் உனக்கு சொந்தமில்லாததை அடைய ஆசைப்படும் உனக்கு நான் உதவிசெய்ய விரும்பவில்லை. மரியாதையாக இப்பொழுதே இங்கிருந்து செல்… இல்லாவிட்டால் உன்னையும் தண்ணீரில் மூழ்கடித்துவிடுவேன்! என்று ஆவேசமாக கூச்சலிட்டாள். ஐயோ, தெரியாமல் பிழை செய்துவிட்டேன்… என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் தாயே…. என்னுடைய இரும்புக் கோடரியையே கொடுத்துவிடுங்கள் போதும்… என்று பயத்துடன் கேட்டான் விறகுவெட்டி. கோபத்தில் கண்கள் சிவக்க, இப்போது இங்கிருந்து போகிறாயா இல்லையா? என்று அவனை நோக்கி தேவதை வேகமாக வருவதைக் கண்ட அவன் பயந்து தப்பித்தால் போதும் என்று பின்னங்கால் பிடறியில் பட, ஐயோ! அம்மா! காப்பாற்றுங்கள்! என்று அலறிக்கொண்டு ஓட்டமாய் வீடு வந்து சேர்ந்தான்.

என்ன ஆச்சு? என்று கேட்ட பெண்டாட்டியிடம், அடியே, உன் பேச்சைக்கேட்டு போனேன் பார், என்னைத்தான் நொந்துக்கணும்.. நல்ல வேளை… உயிரோட விட்டாள் அந்த தேவதை… என்று மூச்சிறைக்க உட்கார்ந்தான்...என்று கதையை முடித்தபடி, இப்போ சொல்லு… இதுலேர்ந்து என்ன தெரிஞ்சிண்டே? என்று கேட்டார் தர்மராசு. பேரனிடமிருந்து சிறிதுநேரம் பதில் வராததை உணர்ந்த அவர், இந்தக் கதையின் நீதியை - அதாவது, ஒன்று, பேராசைப்படக் கூடாது என்பது, இரண்டாவது, மற்றவர் பொருளின் மீது ஆசைப்பட்டால் இருப்பதும் போய்விடும் என்பது - உணர்த்தவேண்டும் என்று அவனுக்கு மெதுவாக விளக்கத் தயாரானார்.

சுகுமார் நிமிர்ந்து உட்கார்ந்தான். தாத்தா… இந்த விறகுவெட்டி என்ன தப்பு செஞ்சான் தாத்தா? அவன் பெண்டாட்டி சொல்லித்தானே அவன் குளத்துக்குப் போனான்? அவனா ஒண்ணும் தப்பு செய்யலியே? அதுவுமில்லாம அந்த இரும்புக் கோடரி அவனோடதுதானே? அதை எப்படி அந்த தேவதை தரமாட்டேன்னு சொல்லலாம்? அவனோட கோடரியை தேவதை எடுத்துண்டா அது தப்பில்லையா? என்று கேட்ட பேரனைப்பார்த்து வாயடைத்துப்போனார் தர்மராசு.

அப்பா…கொழந்தே…. நீ சொல்றது ரொம்ப சரி…. இதே கதையை என்னோட தாத்தா, அப்பா சொல்ல நான் கேட்டிருக்கேன்… ஆனா இப்படி யோசிக்க எனக்கு அப்பவும் தோணலை, இப்பவும் தோணலையே? பதவியில்தான் நான் நீதிபதி… உண்மையில் நீதான் நீதிபதி… நீதின்னா எப்படி இருக்கணும்னு எனக்குப் புரியவெச்சிட்டியே…அந்த தேவதை செஞ்சது தப்புதான். அவனுக்கு புத்தி சொல்லி அவனோட கோடரியை அவங்கிட்டயே குடுத்திருக்கணும்… அதுதான் சரி…. என்று கண் கலங்க அவனை எடுத்து அணைத்துக்கொண்டு உச்சிமோர்ந்தார் தர்மராசு.