Wednesday, October 23, 2024

மாயவன்

 



மாதவம் யாதும் செய்திலையாயினும்
மாதவன் ஆலய தரிசனம் பெற்றேன்
மாநிறை மனதோடு வெளிவரும் வழியில்
விழிநிறை காட்சியும் தந்தான் அம்மாயன்
ஏழைச் சிறுவனவன் ஏதுமில்லாதவன்
ஏந்திய கைபேசியில் படத்தைக் காண
எத்துணை ஆர்வமாய் ஓடி வந்தானோ
வந்தவனை அக்கணமே நான் பிடித்துவிட்டேன்
எடுத்த படத்தைக் காணும்போது தான்
எனக்குள் ஓர் இனம்புரியா எண்ணம்
மனதைச் சுண்டிய சிறுவனின் அழகு
மாயவன் நகைக்கு ஒப்பானதன்றோ
மீண்டும் காண்கையில் நகைக்கிறான் மாயவன்
மற்றொரு விரலால் வானைச்சுட்டி
என்னிலும் அவனைக் கண்டீராயின்
எங்கும் வேற்றுமை மறைந்திடுமன்றோ
அரிதாய்க் கிட்டிய மானிடப் பிறப்பில்
உரித்தாகுமோ உயர்ச்சி தாழ்ச்சி
பரமன் படைப்பில் பேதம் உண்டோ
பரந்த அன்புடன் பார்வையிட்டால்

Aug 15, 2024


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home