Wednesday, October 23, 2024

உண்மை

 

திளைக்கும் பல் வண்ணங்க ளிடையில்
தூய வெண்மை தரமிக்க தாகிறது
ஆரவாரமிக்க பலகுரல் ஓசைகளில்
அமைதியின் மதிப்பே அரியணையேறுகிறது.

வயிறுமுட்டும் சுவை விருந்தைவிட
விரதமே உடல்நலம் காக்கின்றது
உலகப் பயணத்தின் உல்லாசத்தையும்
ஓரிடத்து தியானம் வெல்கின்றது.

திறந்த கண்கள் உலகைக் காட்டினாலும்
மூடிய கண்களே உள்ளத்தைத் திறக்கின்றன
ஆயிரம் அறிவுரை யார்யார்வாய்க் கேட்பினும்
அகத்தின் குரலே அருளாக ஒலிக்கின்றது.

எண்ணிலாத் தகவல்கள் கேட்கலுற்றாலும்
உண்மையாய்ந்து உள்வாங்கி செயல்பட்டால்
விந்தை உலகின் வியப்புகளில் மயங்காமல்
சிந்தை தெளிந்து சிறப்புடன் வாழலாம்.


June 3 2024

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home