Thursday, October 24, 2024

மரத்தடி விநாயகர்

 



அரசமரப் பிள்ளையார் அருள்செய்யும் பிள்ளையார்

விவசயாம் ஓங்கிடவே விமரிசையாய் வணங்கிடுவோம்


ஆலமரப் பிள்ளையார் ஆரோக்கியப் பிள்ளையார்

நோயுற்றோர் நலம்பெறவே நாள்தோறும் வேண்டிடுவோம்


இலுப்பைமரப் பிள்ளையார் இன்னல் தீர்க்கும் பிள்ளையார்

கட்டிடங்கள் கட்டுவோர் கட்டாயம் கும்பிடுவோம்


சந்தனமரப் பிள்ளையார் சந்தானப் பிள்ளையார்

வியாபாரம் செய்வோர் விரும்பியே வணங்கிடுவோம்


நாவல்மரப் பிள்ளையார் நலமருளும் பிள்ளையார்

பிரிந்தவர் ஒன்றுகூட பரவசமாய்த் தொழுதிடுவோம்


நெல்லிமரப் பிள்ளையார் பிள்ளைதரும் பிள்ளையார்

பெண்குழந்தை வேண்டுவோர் போற்றியே பதம்பணிவோம்


புன்னைமரப் பிள்ளையார் பூசல்தீர்க்கும் பிள்ளையார்

தம்பதியர் பிரியாதிருக்க தலைவணங்கி தவமிருப்போம்


மகிழமரப் பிள்ளையார் மகிழ்ச்சிதரும் பிள்ளையார்

பணிக்காகச் செல்பவர் பணிந்தே வணங்கிடுவோம்


மாமரப் பிள்ளையார் மாசகற்றும் பிள்ளையார்

பகைவர்பலர் கொண்டோர் பணிவுடனே வேண்டிடுவோம்


வன்னிமரப் பிள்ளையார் வரன் தரும் பிள்ளையார்

கன்னியரும் காளையரும் கைகூப்பித் தொழுதிடுவோம்


வில்வமரப் பிள்ளையார் விசேஷப் பிள்ளையார்

படிப்பறிவும் பந்தமும்பெற பக்தியுடனே பணிந்திடுவோம்


வேப்பமரப் பிள்ளையார்  வரன் அமைக்கும் பிள்ளையார்

மனதினிய மாங்கல்யம்பெற  மூஷிகவாகனனை மதிநிறைப்போம்


9.7.21







0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home