Tuesday, January 28, 2025

அம்புக் கவிதை

 

விடுத்தேன் தேர்ந்த அம்பினைக் காற்றினில்


விழுந்த தெங்கோ அறிகிலேன் காரணம்


வீச்சின் விரைவைத் தொடர என் பார்வை


வேகம் போதுமாய்ப் பெறவில்லையே காண்.



தொடுத்தேன் தொடர்ந்தோர் பாவைக் காற்றினில்


மடுத்ததெச் செவியோ அஃதும் அறிகிலேன்


வடித்தது உள்ளத் துவகையாலாயினும்


படித்துச் சுவைக்கும் பண்புளார் யாரோ.



கண்டே மகிழ்ந்தேன் காட்டிடை மரத்தில்


செண்டாய்ப் பதிந்து செருகிய அம்பினை


கொண்டேன் அதனினும் ஆழ்ந்த களிப்பு


கொண்டாடிய அப்பாவைக் கண்டதும் நண்பனுளத்தே!



The Arrow and the Song by 

H.W.Longfellow 


I shot an arrow into the air,

It fell to earth, I knew not where;

For, so swiftly it flew, the sight

Could not follow it in its flight.


I breathed a song into the air,

It fell to earth, I knew not where;

For who has sight so keen and strong,

That it can follow the flight of song?


Long, long afterward, in an oak

I found the arrow, still unbroke;

And the song, from beginning to end,

I found again in the heart of a friend

Friday, January 24, 2025

ஓரிடம்

 

பிறர் மெச்ச வாழத் தேவையில்லை

நடந்த தவறுகளுக்கு வருந்தவும் தேவையில்லை

இயற்கையாய் எழும் ஆசைகளை

நிறைவேற்றிக்கொள்வதில் தவறுமில்லை


உனது வேதனைகளை என்னிடம் சொல்

என்னுடையதை நான் உனக்குச் சொல்கிறேன்

யாருக்காகவும் நிற்காமல் இயங்கிக்கொண்டிருக்கும்

இயற்கையின் பாடங்களை கற்றுத் தருகிறேன்


அகன்ற புல்வெளியிலும் அடர்ந்த காடுகளிலும்

உயர்ந்த மலைகளிலும் ஓடும் ஆறுகளிலும்

வெய்யிலும் மழையும் தம்பணி செய்தாலும்

உலகம் நிற்காமல் இயங்கித்தானிருக்கிறது.


அதிகாலை வானைக் கடக்கும் பறவைக் கூட்டம்

அந்தியில் கூடுகளுக்குத் திரும்புவதைக் கண்டால்

யாரும் தனியில்லை யாவர்க்கும் ஓரிடம் உண்டு என

கூறும் இயற்கையில் குரல் கேட்கவில்லையா


வாழ்க்கை எளிதாக இல்லாமலிருக்கலாம்

நாம் நினைப்பதெல்லாம் நடக்காமலுமிருக்கலாம்

ஆயினும் வானில் பறவைகளைக் காணும்போது

நமக்கும் ஓரிடம் உண்டு என்பதை நினைவில்கொள்.


==

Translation of "Wild Geese" by Mary Oliver


You do not have to be good.
You do not have to walk on your knees
for a hundred miles through the desert repenting.
You only have to let the soft animal of your body
love what it loves.
Tell me about despair, yours, and I will tell you mine.
Meanwhile the world goes on.
Meanwhile the sun and the clear pebbles of the rain
are moving across the landscapes,
over the prairies and the deep trees,
the mountains and the rivers.
Meanwhile the wild geese, high in the clean blue air,
are heading home again.
Whoever you are, no matter how lonely,
the world offers itself to your imagination,
calls to you like the wild geese, harsh and exciting -
over and over announcing your place
in the family of things.


விழிப்பு

 

விழித்தும் விழிக்காதிருக்கும் வித்தையை

வித்தையெனப் பெற்றதில்லையெனினும் - அவ்

விந்தையை என்றாவதொருநாள் உணர்ந்ததுண்டு

விழிதிறவா விடியலின் மயக்கத்தில்தானோ!


எழுந்தாக வேண்டிய இலக்கென இல்லையாயினும்

விழுந்த உடலின் அயர்வை நீக்கி

அழுந்திய விழிகளை அகலத் திறந்து

வழங்கும் விடியலும் அவனருள்தானோ!


படுக்கையை விட்டகலாமல் உலகையே

நொடிக்குள் கடக்கும் சித்திகைகூடி மனதில்

கிடக்கும் அழுத்தத்தை அழுத்திப்பறந் தவனின்

இடத்தை நாடச் செய்வதுவும் அவன்செயலோ!


அனைவரும் ஆழ்ந்துறங்கும் அதிகாலைப்போதில்

எனைமட்டும் எழுப்பி எண்ணத்தைக் கிளறி

துணையேதுமின்றித் தனியாய்த் துழாவியே

நினைவுகளை நெருடும் நேயம்தான் ஏனோ!


அள்ளிமாளாத எண்ணக் குவியலில்

புள்ளியாய்க் கரைந்து புள்ளினக் கரையொலியால்

பள்ளியெழுந்து பக்கமனைத்தும் பார்த்தால்

எள்ளிநகைவதும் எனையாளும் அவனேயன்றோ!



Friday, January 3, 2025

Life


What is life, the big question that often lingers
in everyone 's mind a little towards the end.
The answer is limited to a count of fingers
that much is quite easy to comprehend.

Success, says the businessman without a hint
of the failures he tucked hidden under the floor
Fame says the celebrity gulping with her pint
the shame and prejudice she met behind the door.

Love, says the monk who has renounced it all,
Karma, says the preacher who only knows to well.
Care, cry the poor, always at others' beck and call,
Money, laughs the politician, seeing to his pockets swell.

Not many realize it as an opportunity of grace
to use your power to light a smile on others' face.