விடியல்
நள்ளிரவில் வாங்கினோம்
விடியல் காட்ட மறுக்கிறார் - கோழை
கள்ளமன அந்நியர்கள்
நடிப்பான நட்புடனே
ஒற்றுமையாய் வாழவிடாமல்
பிரித்தாளும் சூழ்ச்சியினால் - பல
வேற்றுமை உட்புகுத்தி
சிரிக்கிறார் சண்டைமூட்டி
வல்லிரவுத் தூக்கத்தை
விட்டொழித்து விழித்தெழுந்து - நாட்டில்
நல்லார் தீயோர் இனங்கண்டு
இட்டுச் சொல்வோம் நல்வழிக்கே
பசித்திருப்போம் நல்லவை கொள்ள
விழித்திருப்போம் நாட்டைக் காக்க - என்றும்
தனித்திருப்போம் தீயவை விலக்க
சேர்ந்திருப்போம் எதிரிகளை விரட்ட
வாழ்க நம் தாய்த் திருநாடு
வளர்க நம் நிறைந்த பண்பாடு - இன்னும்
செழிக்க நம் இயற்கை வளங்கள்
நிலைக்க ஆன்றோர் பெற்ற சுதந்திரம்
ஜெய் ஹிந்த்!
சுதந்திர தின வாழ்த்துகள், வணக்கங்கள்.
Aug 15, 2024
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home