Wednesday, October 23, 2024

Sometimes....

 

Robert Blake .. Sometimes..
*These Beautiful lines by Robert Drake are worth many a repeat….*
Sometimes,
I feel I want to go back in time...
Not to change things, but to feel a couple of things twice..
Sometimes,
I wish I was a Baby for a while...
Not to be walked in the pram but to see my Mother's smile
Sometimes,
I wish I could go back to school...
Not to become a child but to spend more time with those friends, I never met after school..
Sometimes,
I wish I could be back in college...
Not to be a rebel but to really understand what I studied
Sometimes,
I wish I was a Fresher at my work...
Not to do less work but to recall the joy of the first pay cheque.
Sometimes,
I feel I still had some more time to live...
Not to have a longer life but to know what I could give to others.
Since the times
that are gone can never come back, let's enjoy the moments as we live them from now on, to the fullest..
Let's Celebrate our Remaining Life - Every Moment and Every Day.

Sep 26, 2024
Here is my take:
நீண்டு கடந்த காலத்திற்கு செல்ல
நினைத்திருகிறேன் நான் சிலமுறை -
நிகழ்ந்தவைகளை மாற்ற அல்ல
நினைவில் நின்றவற்றை மீண்டும் அனுபவிக்கவே.
அழகுக் குழந்தையாய் மீண்டும் மாற
அடிக்கடியே விழைந்திருக்கிறேன் -
ஆடும் தொட்டிலில் துஞ்சுவதற்கு அல்ல
அன்னையின் புன்னகையை அருகில் காணவே.
பள்ளிக்கூடத்திற்குச் செல்லவும்
பலமுறை ஆசைப்பட்டிருக்கிறேன் -
பாலகனாய் மாற அல்ல
பழைய நட்புகளை புதுப்பிக்கவே.
கல்லூரிக்குள் நுழையவும்
கனவு கண்டிருக்கிறேன் -
கட்டுப்பாடுகளை எதிர்க்க அல்ல
கற்றவைகளை சரியாகப் புரிந்துகொள்ளவே.
முதல்முறை பணியில் சேரவும்
முடியாத கனவில் மிதந்திருக்கிறேன் -
மிதமான பணிகளை சுமக்க அல்ல
முதல் வருமானத்தின் மகிழ்ச்சிக்காகவே.
வாழ்நாள் இன்னும் நீடிக்க
விரும்பியதையும் நானறிவேன் - வெகுநாள் வாழும் ஆசையினால் அல்ல
வாழ்வில் கற்றவை பகிர்ந்து கொள்ளவே.
போன பொற்காலங்கள் மீளாது
போனவை என்றும் போனவையே
பொன்போல் இருக்கும் நாட்களையாவது
போற்றி மகிழ்ந்திடுவோமே.
இனியொரு முறைதான் பிறப்போமா
இழந்த கணங்களைப் பெறுவோமா
இருக்கும்போதே அனுபவிப்போம்
இனிய நினைவுகளில் நிறைந்திடுவோம்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home