எல்லைக்கரை அனுமன்
அரங்கத்தரங்கன் எல்லை எதுவரை
ஆனைக்கா அரிஹரன் எல்லை எதுவரை
தொல்லைதரும் எல்லைப்பிணக்கிற்கு
ஆண்டவனும் இல்லை விதிவிலக்கு
வந்தார் வியாசராஜர் விஜயநகரப் பேரரசர்
கிருஷ்ணதேவராயரின் தூதுவராக
தந்தார் ஓர் நல்வழி சைவ-
வைணவப் பெரியோர்களின் ஒப்புதலுக்காக
இறுக மூச்சைப் பிடித்தபடி
திருரங்கத்திலிருந்து நடந்தார் நீண்ட வழி
இறுதியாய் நின்ற இடத்தில்
நிலைத்திட்டது அவர் விழி
அதுவரையில் அரங்கன் எல்லை
அப்பாலுள்ளது அரிஹரன் எல்லை
இது சம்மதமா எனவினவ
இன்புடன் பெரியோர்கள் இசைந்தனரே
எல்லைக்கோர் அடையாளமாக
அமைத்தார் அனுமன் ஆலயத்தை
எல்லைக்கரை அனுமன் என்றே
பெயரும் சூட்டினார் அவ்விடத்திற்கு
எல்லைப் பிணக்கு அத்தோடு
இல்லையென்றானது மட்டுமல்ல
எல்லையும் கரைந்ததன்றோ சைவ-
வைணவ சமுதாயத்தினிடையே
இன்றளவும் அவர்புகழ் அரங்கத்தீவில்
பறைசாற்றிக் கொண்டிருக்கும்
அஞ்சனை மைந்தனின்
அழகிய ஆலயத்திற்குச் சென்று
எல்லைக்ரை அனுமனின் அருளாசி
பெற அவனடி தொழுவோம்
எல்லையில்லா இன்பம்
இவ்வையகத்தோர் பெற வேண்டுவோம்.
July 13, 2024
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home