அம்மா கோண்டு
என் சமையல் அவருக்குப் பிடிக்கவில்லை
நான் செய்த பண்டங்களை அவர் ருசிப்பதில்லை
எப்போதும் குறையே சொல்லுகிறார் - தன்
தாயையே நினைத்துக் கொள்ளுகிறார்,
நான் கொடுக்கும் காபி கசக்கிறதாம்
நான் வைத்த குழம்பு கடுக்கிறதாம்
துணிகளை நான் துவைப்பதில்லையாம் - அவர்
தாயைப்போல் மடித்து வைப்பதில்லையாம்.
நானும் தேடித்தான் பார்க்கிறேன்
ஏதாவது வழி இருக்குமா வென்று
எப்படியாவது என்பக்கம் திருப்பலாம் - அவர்
தாயின் பிடியிலிருந்து வென்று
அப்பாடா! ஒரு ஆயுதம் கிடைத்தது
நினைக்க நினைக்க மனம் இனித்தது
கன்னத்தில் விட்டேன் ஓர் அறை - அவர்
அன்னையை மறக்காத குறை!
June 20, 2024
In response to this poem shared on Whatsapp:
*A Wife’s Poem*
_He didn’t like my curry_
_And he didn’t like my cake;_
_He said my biscuits were too hard_
_Not like his mother used to make._
_I didn’t prepare his coffee right,_
_He didn’t like my stew,_
_I didn’t mend his socks_
_The way his mother used to do._
_I pondered for an answer_
_I was looking for a clue._
_Isn’t there anything I could do_
_To match his mother’s shoe?_
_Then I smiled as I saw the light,_
_And that smile, it grew and grew._
_I turned around and slapped him tight,_
_Like his mother used to do!_
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home