Vasanthi 60
அறிந்திருந்தேன் அவளை தோழியாய்
அறிந்திலேன் வருவாளெனத் துணைவியாய்
தெரிந்திருந்தேன் அவளை வசந்தியாய்
நுழைந்தாள் என் வாழ்வில் வசந்தமாய்
ஒன்றுமறியா பருவத்தில் ஒன்றிணைந்து
ஒன்றாய் வாழ்வை தொடங்கினோம்
ஒருவருக்கொருவர் துணையாகக்கொண்டு
ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கினோம்
ஆணின் பங்கு உழைப்போடு நின்றாலும்
பெண்ணின் பங்கு அன்புடன் காப்பதன்றோ
பொறுமையுடன் அனைவரையும் பேணி
பொறுப்புடன் பணியிடத்திலும் சிறந்தாளே
அறிவும் பண்பும் பெற்றவளாம்
கனிவும் பணிவும் அவள் குணமாம்
சுற்றமும் நட்பும் நாடுபவள் அவள்
சுவையான இன்னமுதும் படைப்பவளாம்
தன்னகத்தின் நலம் கருதி பணியுயர்வை
தயக்கமின்றி தாரை வார்த்து என்றும்
அருகிலிருந்து பார்த்துக்கொள்ள
அரும்பாடு பட்டது அவள்தானன்றோ
புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்த்து
பிறந்த வீட்டுப் பிணைப்பும் காத்து
பள்ளிப் பருவத்து நட்பும் பேணி
பணியிடத்திலும் பலரன்பை பெற்றவளே
எம்நலம் காத்தது மட்டுமல்லாமல் நின்
பணியிலும் சாதித்தது யாமறிவோம்
உன்னால் உயர்ந்திட்ட உயிர்களனைத்தும்
உன்நலம் விழைந்தே வாழும்காண்
குலத்திற்காக செம்மையாய் உழைத்திட்ட
குலவிளக்கிற்கும் சற்றே ஓய்வளிக்க
பணிநிறைவு நாளும் வந்திட்டதால்
பாங்காய் கூடியிங்கு வாழ்த்திடுவோமே
(my gift on her retirement)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home