பாலும் தெளிதேனும்
பாலும் தெளிதேனும் பாகும்பருப்பும் இவை
நாலும் கலந்திட்டாள் அவ்வைதான் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே - நீயவளுக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தந்தாயே,
இட்டிலியும் மோதகமும் விரும்பியே சமைத்திட்டு
தட்டில் வைத்துனக்கு படைத்திடுவேன் - மாற்றுசிரத்தோனே
ஏற்றமும் தாழ்வும் வினைப்பயனாய் வந்திடினும்
கூற்றுவன் வரும்வரை உன்நினைவகற்றாதே. In
கரும்பும் கதலியும் தினைமாவும் தேங்காயும்
அரும்பும் ஆனந்தத்துடன் ஏற்றிடுவாய் - மூஷிகவாகனனே
தோஷங்கள் நீக்கித் தூயவனாய் ஆக்கிடுவாய்
வேஷமில்லா வெள்ளை மனத்தானாகவே.
எருக்கும் அருகும்செம் பருத்தியும் அரளியும்
கருத்தாய் அணிவித்தே கும்பிட்டேன் - ஆண்டவனே
வேண்டுவது அக்கணத்தின் ஆசையாய் இருப்பினும்
மீண்டும் பிறவா வரமருள்வாயே.
செப்,6, 2024
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home